"தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒருசிலரின் வரலாறே உலக சரித்திரமானது"
Wednesday, November 30, 2011
மணத்தக்காளிக் கீரையின் உடல்நலப் பயன்கள்
1. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும். குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம்.
2. வாரம் இரு முறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.
3. இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும்.
4. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
5. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
6. கண்பார்வை தெளிவு பெறும்.
7. வயிற்று நோய், வயிறு ஊபுசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணதக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
8. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
9. மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.
10. கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும்.
11. மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.
12. கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது.
13. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, November 29, 2011
Monday, October 31, 2011
Thursday, October 27, 2011
பொருத்தம் பார்ப்பதில் நட்சத்திரமும், ஜாதகமும்
நட்சத்திரம் என்பது என்ன? ஒரு மனிதனை அறிமுகம் செய்வது நட்சத்திரம். இந்த உலகத்திற்கு நான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று உரைப்பது ஒருவருடைய நட்சத்திரம். கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது கூட, உங்களுடைய சாதி என்ன என்று கேட்கப்படுவதில்லை, என்ன நட்சத்திரம் என்றுதான் கேட்கப்படுகிறது. ஏனெனில் அதுவே ஒருவருடைய விலாசம், அதாவது நான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று கூறுகிறோம். அதனால்தான் பெயரைச் சொல்லி, நட்சத்திரத்தை சொல்கிறோம். எனவே நம்மை இனங்கண்டறிவது நட்சத்திரம்தான்.
எனவே திருமணத்திற்கு முதலில் நட்சத்திரப் பொருத்தம் பார்க்கிறோம். நட்சத்திரத்தை முடித்த பின்னர், மீதமுள்ள ஒன்பது இடங்களையும் பார்க்க வேண்டும், அதற்கு ஜாதகத்தை புரட்டுகிறோம். நட்சத்திரப் பொருத்தம் என்பது ஒரு தொடக்கம். அப்போதெல்லாம், எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்ப்பார்கள், அவர் அப்படித்தான் பார்த்து மணப் பொருத்தம் செய்தார். அதன் பிறகு எனது தந்தையார் அதனை 15 பொருத்தங்களாக மாற்றினார். இப்போது 10 ஆகியுள்ளது.
இதையெல்லாவற்றையும் தாண்டி இப்போது நான் பார்ப்பது குறிப்பாக ஐந்து பொருத்தங்களைத்தான். தினப் பொருத்தம், கனப் பொருத்தம், யோனி பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகியன. இந்த ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில்தான் மற்ற பொருத்தங்கள் எல்லாம் பார்க்கப்படுகிறது. எனவே நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்காமல் இருந்துவிடலாகாது. 10 பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்துவைத்த பத்தாவது நாளிலேயே டைவர்ஸ் செய்து கொண்டவர்களையெல்லாம் பார்க்கிறோம்.
இதற்கு காரணம் என்ன? கிரகங்களையும் பார்க்க வேண்டும். கிரகங்கள் என்று சொன்னால் அந்த கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தினப் பொருத்தம் என்பது என்ன? தினந்தோறும் இவர்களிடையே நடைபெறும் சம்பாஷனைகள், அதாவது உரையாடல்கள். கணவன் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு மனைவி சொல்லும் பதிலும், மனைவி ஒரு கேள்வி கேட்டால் அதற்கு கணவன் சொல்லும் பதிலும் முக்கியமானது. அப்படிக் கேட்கும்போது பாந்தமாக ஒருவருக்கு ஒருவர் பதில் கூற வேண்டும்.
உதாரணத்திற்கு, தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடேன் என்று கணவர் கேட்க, அதற்கு மனைவி, அதோ அங்கு குடம் இருக்கிறது, சொம்பு இருக்கிறது, எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? என்று சொன்னால் என்ன ஆவது? அதே நேரத்தில், இருங்க, இதோ கொண்டு வருகிறேன் என்று சொல்வது எப்படியிருக்கிறது? அதாவது இந்த உரையாடல் உள்ளிட்ட ஒவ்வொரு பரிமாறலிலும் அன்னியோன்யம் இருக்க வேண்டும். இதைக் காண்பதுதான் தினப் பொருத்தம் என்பது.
தினப் பொருத்தம் இருந்தும், லக்னத்தின் இரண்டாவது வீட்டில் 6க்கு உரியவர், 8க்கு உரியவர் இருந்தால், அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே ஒரு முரண்பாடாக இருக்கும். அதாவது கணவர் கேட்பது ஒன்றாகும், மனைவி கூறும் பதில் வேறாகவும் இருக்கும். அது எரிச்சலூட்டும். எனவேதான் ஜாதக பொருத்தம் என்பது மிகுந்த அவசியமாகிறது.
இன்னும் கூறப்போனால், நட்சத்திரப் பொருத்தம் என்பது அவர்கள் இருவரை மட்டும் சார்ந்தது, ஆனால், ஜாதகப் பொருத்தம் என்பது அவர்களுடைய உறவுகள் நிலை பற்றி உரைக்கக் கூடியது. மாமனார், மாமியார், நாத்தனார் போன்றவர்களோடு அனுசரித்துப் போவார்களா என்பதைக் கண்டறிய ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம். எனவே இந்த இரண்டிற்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும்.
Wednesday, September 7, 2011
சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்.
Saturday, August 27, 2011
ஓணம் பண்டிகை
கேரள மக்களின் வசந்த கால விழாவாக ஓணம் கொண்டாடப்படுகிறது. மாவேலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும்.
மாவேலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகையை விவரிச்சுச் சொல்லணுமுன்னா இது 10 நாள் கொண்டாடற பண்டிகை.கடைசி நாள்தான் ஓணம். சிங்க மாசத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரைஇருக்கும் 10 நாட்கள்தான் விழா நாட்கள்
மகாபலியை வரவேற்க வாசலில் போடும் பூக்களம்ன்னு சொல்ற அலங்காரம் பண்டைய நாட்களில் ஹஸ்த்தம் ( அத்தம்) நட்சத்திரம் வரும் முதல்நாளே ஆரம்பிக்குமாம். குடும்பத்திலே இருக்கும் ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்னும் பூவை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம். அதைத்தான் பூக்களத்துலே முதல்லே வைக்கணும். அப்புறம் தினமும் வெவ்வேறு பூக்களைச் சேகரிச்சு அலங்கரிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.இப்படியே 10 நாள் ஆனதும் அந்தக் கோலம் பிரமாண்டமாய் பெரூசா இருக்குமாம்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டடுகின்றனர்
Tuesday, August 23, 2011
ஹிந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்
* இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
* ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.
* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.
* அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.
* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.
* கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.
* நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
* கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.
* எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.
* திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
* சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.
* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
* கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.
* இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.
*சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.
*சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
* தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.
* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
* தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.
* வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
* மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.
* பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
* ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
* வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
* ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
* தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
* பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.
* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
* அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.
* ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
* பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
* பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.
* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.
* பசு மாட்டை, "கோமாதா'வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.
* தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.
* பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
* தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.
* அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

Saturday, August 20, 2011
சாப்பிடும் போது கவனிக்க வேண்டியது!
இது, "ஆச்சாரக் கோவை'யில சொல்லப்பட்டது...
சாப்பிடறதுக்கு முன்னே, கை, கால் அலம்பி, வாய் கொப்பளிக்கணும்... உடனே, காலையும் கழுவணும்... காலை கழுவிய ஈரத்துடனே சாப்பிட உக்காரணும்... அப்பறம், சாப்பிடப் போற இலையோ அல்லது தட்டையோ சுற்றி நீர் தெளிக்கணும்... இது, எறும்பு அல்லது ஈ அங்கே அண்டாமல் இருக்கறதுக்கு!
இப்போ, "புபே'ன்னு நாகரிகமா, அவாளே எடுத்து போட்டுண்டு, நின்னோ, நடந்தோ சாப்பிடுறாளே... அது தப்பு! "புபே'ன்னாலும், எடுத்துப் போட்டுண்டு, எங்கேயாவது உக்காந்துண்டு தான் போஜனம் பண்ணணும்! சாப்பிடும் போது பேசிண்டே இருக்கப் படாது!
சாப்பிடறது கிழக்குப் பக்கமாவோ, வடக்குப் பக்கமாவோ இருக்கணும்! தெற்கு, மேற்கு திசைகளைப் பார்த்து சாப்பிடறதை கண்டிப்பா, "அவாய்ட்' பண்ணிடனும்...கல்யாணப் பந்தியிலோ அல்லது வேறு விசேஷ பந்தியிலோ அமர்ந்து சாப்பிடும் போது, நம்மை விட மூத்தோர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடப்படாது... ஒரு வேளை, அப்படி அமைஞ்சுட்டுதுன்னா, அவா சாப்பிட ஆரம்பிக்கு முன்னே நாம் சாப்பிடப்படாது; அது போலவே, அவா சாப்பிட்டு எழுந்திருக்கு முன்னே நாம் எழுந்திருக்கப் படாது!
பொதுவா, மூத்தவா சாப்பிட்டப்பறம், இளையவா சாப்பிடறது தான் நல்லது...
"முதல்ல பாயசம் அல்லது பூந்தி போன்ற இனிப்பு வகைகளையும், மத்த, "ஐட்டங்களை' இடையிலும், கடைசியில் கசப்பு உணவுகளையும் சாப்பிடணும்... சில பேர் மோர் சாதம் சாப்பிட்டப்பறம் பாயசம் சாப்பிடுவா... அது ரொம்பக் கெடுதி தெரிஞ்சுக்கோ!
சாப்பிட்டப்பறம் நன்னா வாய் கொப்பளிச்சுட்டு, கால் அலம்பின ஈரம் காயர வரை நன்னா நடந்துட்டுத் தான் ராத்திரியில படுக்கைக்குப் போகணும்!
விருந்தாளிகள், மூத்தோர், குழந்தைகள், பசு, பறவைகளுக்கு உணவு அளித்த பிறகு தான், இளையோர் சாப்பிட வேண்டும்!
சாப்பிட்ட பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் டம்பளரையோ, குவளையையோ ரெண்டு கையிலும் பிடிச்சுண்டு குடிக்கப்படாது... பெரியோருக்கு ஏதாவது ஒன்றைத் தரும் போதோ அல்லது பெறும் போதோ மட்டுமே இரு கைகளாலும் செய்யணும்.

Friday, August 5, 2011
நல்ல எண்ணங்கள்
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

Friday, July 29, 2011
Story of First Private University in India.........!!
Madan Mohan Malaviya was a freedom fighter, author, editor & publisher of newspapers, educationist. He is credited with popularising the slogan "Satymeva Jayate". He was the first one to establish a private university in India which is based on the model of historical Nalanda, Takasheela Vidya Peethams.
When Malaviya was trying to build a good university, he had to overcome many difficulties and barriers. He worked with determination to start the university. There was funds crisis; but he did not get dishearted. He went from town to town, met many rich people and traders to collect donations.
He went to the Nizam of Hyderabad (then reputedly the richest man in the world) to request him for funds. The Nizam was furious, " How dare you come to me for funds ? " He roared with anger, took off his footwear and flung it at Malaviya. Malaviya picked up the footwear and left silently. He went directly to the market place and began to auction the footwear. As it was Nizam's footwear, many came forward to buy it. The bids kept going up.
When Nizam heard of this, he became uneasy. He thought it would be an insult if his footwear were to be bought by someone for a pittance. So he sent one of his attendants with the instruction, 'Buy that footwear no matter whatever the price be!'
Thus, Malaviya managed to sell the Nizam's own footwear back to him, for a huge amount. He used that money to build the Banaras Hindu University .

Thursday, May 5, 2011
Hindu Dharma Vidya Peetam
Hindu Dharma Vidya Peetam
Kanyakumari district had been remaining vulnerable to religious conversion and the number of Hindus had been dwindling rapidly. Swami Madhuranandaji found that the cause was more of the ignorance of Hindus about their own religion than anything external. He thought that enlightening the Hindus about their rich spiritual wealth and glorious heritage and thus connecting them to their life-giving, life-saving, life-transforming roots of the Eternal religion would anchor their rootless survival. So he started Sunday classes for Hindus, especially for children, in as early as 1951.
He started Sunday classes in many temples in Kanyakumari district where he taught children, as also others, Gita, Upanishads, moral stories from the Puranas, hymns on Gods and Goddesses and such topics. Slowly and steadily the number of classes increased. In 1981, he consolidated these classes along with various other similar activities and brought them under a separate trust by name Hindu Dharma Vidya Peetam
Activities through Hindu Dharma Vidya Peetam
1. Sunday Classes
The Sunday classes are aimed at imparting working knowledge of Hindu religion and heritage to Hindus. Hindu scriptures, culture, hymns on different deities and such related subjects are taught in these classes.
The classes are classified into five grades with prescribed text books (available in Tamil and Malayalam). Annual exams are conducted and those that are eligible are promoted to the next grade. Grades 4 & 5 have to write two exams in order to pass. Those who pass exam are issued certificates and awarded.
Annually a grand Convocation Ceremony is organized and those who pass the last grade are conferred with the title ‘Vidya Jyoti’. They are presented a shield as also a citation. As a consummation of this convocation ceremony, Bhagavad Gita-homa is performed and the Vidyajyoti title holders take an oath in the presence of the holy fire to the effect that they would remain loyal Hindus and serve Hinduism in all possible ways.
In response to the enthusiasm of students, in 1998, a 6th grade was introduced for deep study on specialized subjects and those who pass were conferred with a title ‘Vidya Bhushan’.
Nowadays this spiritual classes are taken in chennai also. We are conducting this around 25 places.
Those who are interested to attend the class, also ready to take class or ready to give place to take class. Please contact us.
Vidya Jyoti. Kumari Kuselan: 9677191758
Vidya Jyoti. Janagar Dhas: 9283499981

Subscribe to:
Posts (Atom)