Saturday, August 20, 2011

சாப்பிடும் போது கவனிக்க வேண்டியது!

இது, "ஆச்சாரக் கோவை'யில சொல்லப்பட்டது...

சாப்பிடறதுக்கு முன்னே, கை, கால் அலம்பி, வாய் கொப்பளிக்கணும்... உடனே, காலையும் கழுவணும்... காலை கழுவிய ஈரத்துடனே சாப்பிட உக்காரணும்... அப்பறம், சாப்பிடப் போற இலையோ அல்லது தட்டையோ சுற்றி நீர் தெளிக்கணும்... இது, எறும்பு அல்லது ஈ அங்கே அண்டாமல் இருக்கறதுக்கு!

இப்போ, "புபே'ன்னு நாகரிகமா, அவாளே எடுத்து போட்டுண்டு, நின்னோ, நடந்தோ சாப்பிடுறாளே... அது தப்பு! "புபே'ன்னாலும், எடுத்துப் போட்டுண்டு, எங்கேயாவது உக்காந்துண்டு தான் போஜனம் பண்ணணும்! சாப்பிடும் போது பேசிண்டே இருக்கப் படாது!

சாப்பிடறது கிழக்குப் பக்கமாவோ, வடக்குப் பக்கமாவோ இருக்கணும்! தெற்கு, மேற்கு திசைகளைப் பார்த்து சாப்பிடறதை கண்டிப்பா, "அவாய்ட்' பண்ணிடனும்...கல்யாணப் பந்தியிலோ அல்லது வேறு விசேஷ பந்தியிலோ அமர்ந்து சாப்பிடும் போது, நம்மை விட மூத்தோர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடப்படாது... ஒரு வேளை, அப்படி அமைஞ்சுட்டுதுன்னா, அவா சாப்பிட ஆரம்பிக்கு முன்னே நாம் சாப்பிடப்படாது; அது போலவே, அவா சாப்பிட்டு எழுந்திருக்கு முன்னே நாம் எழுந்திருக்கப் படாது!

பொதுவா, மூத்தவா சாப்பிட்டப்பறம், இளையவா சாப்பிடறது தான் நல்லது...
"முதல்ல பாயசம் அல்லது பூந்தி போன்ற இனிப்பு வகைகளையும், மத்த, "ஐட்டங்களை' இடையிலும், கடைசியில் கசப்பு உணவுகளையும் சாப்பிடணும்... சில பேர் மோர் சாதம் சாப்பிட்டப்பறம் பாயசம் சாப்பிடுவா... அது ரொம்பக் கெடுதி தெரிஞ்சுக்கோ!

சாப்பிட்டப்பறம் நன்னா வாய் கொப்பளிச்சுட்டு, கால் அலம்பின ஈரம் காயர வரை நன்னா நடந்துட்டுத் தான் ராத்திரியில படுக்கைக்குப் போகணும்!
விருந்தாளிகள், மூத்தோர், குழந்தைகள், பசு, பறவைகளுக்கு உணவு அளித்த பிறகு தான், இளையோர் சாப்பிட வேண்டும்!

சாப்பிட்ட பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் டம்பளரையோ, குவளையையோ ரெண்டு கையிலும் பிடிச்சுண்டு குடிக்கப்படாது... பெரியோருக்கு ஏதாவது ஒன்றைத் தரும் போதோ அல்லது பெறும் போதோ மட்டுமே இரு கைகளாலும் செய்யணும்.

8 comments:

  1. வலைச்சரத்தில் இன்று தங்கள் தள அறிமுகம் இருக்கு.. நேரம் இருப்பின் வருகை தரவும்.
    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_10.html

    ReplyDelete
  2. சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய நல்ல நல்ல குறிப்புகளை தந்திருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  3. சாப்பிடும்போது இத்தனை கவனிக்க வேண்டுமா? நல்ல நல்ல தகவல்கள். வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே!
    வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்! மிகப் பயனுள்ள விடயங்களைத் தாங்கியுள்ளது உங்கள் தளம் வாழ்த்துக்கள்!!!

    சாப்பிடும்போது சற்றுக்க கவனம் இருக்கவேண்டும் என பொதுவாக அறிந்ததுண்டு... ஆனால் இவ்வளவு விடயங்கள்... இன்றுதான் உங்களிடம்..

    அருமை! வாழ்த்துக்கள்!

    தொடருகிறேன்......

    ReplyDelete
  5. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அனைவருக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete