Wednesday, October 17, 2012

குமரியில் அனைத்து ஹிந்து இயக்கங்களும் ஓன்றுகூடி ...

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் மதவெறியை தூண்டி கலவரத்திற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து இயக்கங்கள் நடத்திய அவசர கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.குமரி மாவட்ட அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் நேற்று நாகர்கோவிலில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதான்யானந்தஜி தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., மண்டல தலைவர் ஸ்ரீநிவாச கண்ணன், மாவட்ட துணை தலைவர் சுதர்சன், வித்யாபாரதி மாநில தலைவர் குமாரசாமி, பா.ஜ., மாவட்ட பொறுப்பாளர் வேல்பாண்டியன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், இந்துமகா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், விஷ்வ ஹிந்து பரிசத் மாவட்ட தலைவர் தாணுமாலய பெருமாள், செயலாளர் காளியப்பன், சிவசேனா மாநில பொதுசெயலாளர் சிவாஜி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் செல்லன், பொதுசெயலாளர் மிசா சோமன், எஸ்.பி., குட்டி, ஜெயராம், அனில்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
அப்போது வெள்ளிமலை ஆசிரம சைதன்யானந்தஜி மகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
 
சமீப காலமாக குமரி மாவட்டத்தில் நடந்துவரும் பல சம்பவங்களும், நடைமுறைகளும் மத வன்முறையை விரும்பும் சக்திகள் மாவட்டத்தில் மத துவேஷத்தை தூண்டி, மத கலவரத்திற்கு வித்திடுவதாக தெரிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் இந்துக்கள் மனதில் தங்களது உரிமைகள் மேலும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் அச்சமின்றி வாழவும், மத கலவரங்களை தூண்டுவோரின் முயற்சிகள் தோல்வி காணவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
இந்துக்கோயில்கள், இந்து ஆதீன சொத்துக்களில் உள்ள மாற்றுமத வழிபாட்டு தலங்களையும், கல்வி ஸ்தாபனங்களையும் அகற்றி சொத்துக்களை மீட்டு, மீண்டும் கோயில்களிடமும், ஆதீனங்களிடமும் ஒப்படைக்க வேண்டும். இந்து கோயில் நிலங்களில் பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அங்கு காலகாலமாக மக்களால் வழிபடப்பட்டு வரும் கோயில்களை பராமரித்து முறைப்படி வழிபாடுகள் நடத்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
 
மதசார்பற்ற நாட்டில் பொது வீதிகளில் இந்துசமய ஊர்வலங்கள் செல்ல அனுமதிக்கவேண்டும். கலவரங்களை தடுக்க வேணுகோபால் கமிஷன் கொடுத்த அறிக்கையின்படி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை மீறி, 1982க்கு பிறகு ஹிந்து ஆலயங்களின் அருகில் கட்டப்பட்டுள்ள மாற்றுமத வழிபாட்டு தலங்களை அகற்றி கலவரம், குழப்பம் வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
 
வேணுகோபால் கமிஷனே, 1982ல் நடந்த கலவரத்திற்கு மூலகாரணமென சுட்டிக்காட்டிய 1981ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி குலசேகரத்தில் இந்துக்களை தாக்கி கலவரம் ஏற்படுத்திய ஒரு அமைப்பால் நடத்தப்பெற்ற ஊர்வலம் போன்றவை இனிமேலும் நடக்காமல் அரசு தடுக்கவேண்டும்.
 
மதசார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் சலுகை, இடஒதுக்கீடு என வழங்கி மதங்களுக்கிடையே வெறுப்பும், விரோதமும் வளர வகைசெய்வதை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.
 
இந்துமத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி நடைபெறும் கூட்டங்களுக்கும், ஊடக நிகழ்ச்சிகளுக்கும் அரசு தடை செய்யவேண்டும்.
 
1980க்கு பின் மாற்று மதத்தவர்களால் கொல்லப்பட்ட இந்துக்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி தொகையும் வழங்கவேண்டும்.
 
நடைக்காவு பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், நடைக்காவு, விழுந்தயம்பலம் பகுதிகளில் இந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
 
கோர்ட்டுக்களில் இந்துக்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களை மாற்று மதத்தவர்களுக்கு பயந்து நடைமுறைபடுத்தாமல் தாமதப்படுத்துவதை விடுத்து உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
எட்டாமடை அம்மன்பொற்றை தேவி அஷ்டகாளீஸ்வரி ஆலயத்திற்கு வழிபட செல்ல நூறாண்டுகளாக பயன்படுத்தி வரும் பாதையை அடைக்க முயற்சி செய்வோர் மீதும், ஆலய மற்றும் ஆலய பூஜாரியின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
தக்கலை அருகே மணலி சந்திப்பில் பல ஆண்டுகாலமாக வழிபட்டு வந்த விநாயகர் வழிபாடு புதிய ஆலயத்தில் தொடர்ந்து பூஜைகள் நடைபெற தற்போதுள்ள தடையை நீக்கவேண்டும். இந்துக்களின் நியாயமான இந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்.
 
இவ்வாறு சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தெரிவிததார்.
ஜெயில், அரசு ஆஸ்பத்திரிகளில்இழிவுபடுத்துவதற்கு கண்டனம்இந்து இயக்கங்களின் ஆலோசனையின்போது; குமரி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஜெயில்கள் போன்றவற்றில் புகுந்து மதமாற்ற முயற்சி செய்பவர்கள் மீதும், இந்து மதத்தை இழிவுபடுத்துவதற்கும் கண்டனத்தை தெரிவித்ததுடன், அதுபோன்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 
மேலும் வீடுகளில் ஒலிபெருக்கி வைத்து மதவெறியை தூண்டும் விதமாக பேசி மதமாற்றத்திற்கும், மதகலவரத்திற்கும் காரணமாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
வன்முறை சக்திகளை வேரறுக்க ஒன்று கூடும் இந்து இயக்கங்கள்
குமரி மாவட்டத்தில் மதத்தின் பெயரால் மோதல்களை தூண்டும் வகையில் நடைக்காவு சம்பவத்தை காரணம் காட்டி பிரச்சினைகளை கட்டவிழ்த்து விடும் சக்திகளை வேரறுக்கவும், அவர்களின் வன்முறை திட்டங்களை முறியடிக்கும் வகையிலும் இந்து அமைப்புகள் அனைத்தும் தற்போது ஒன்று திரண்டுள்ளன.
 
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., விஷ்வ இந்து பரிஷத், இந்துமகாசபா, சிவசேனா, இந்துமுன்னணி என்று அனைத்து அமைப்பு நிர்வாகிகளும் நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரே இடத்தில் கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
 
இந்துக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் எச்சூழலிலும் விட்டுக்கொடுக்க முடியாது. இவற்றில் விரிசல் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தும் வகையில் அனைத்து அமைப்பு தலைவர்களும் ஒன்றுகூடியுள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Friday, August 17, 2012

சூர்ய நமஸ்கார ஆசனம்



பயிற்சி-1
முதல்படியாக இரு கைகளையும் அழகுறக் குவித்துக் கும்பிடும் நிலையில் நிற்கவும்.
பிறகு நேரே கண்களைப் பார்க்கும்படி அமைக்கவும்.
மூச்சை உள்ளே நன்கு இழுத்து மார்பை மேலே ஏற்றி (வயிற்றை யும் லேசாக மேலேற்றி) கும்பிடும் கைகளை மார்பை ஒட்டி வைத்துக் கொண்டு அமைதியாக நிமிர்ந்து நிற்கவும்.

பயிற்சி-2
கைகளை உயர்த்தி உடலை முடிந்த அளவு பின்னால் வளைக்கவும்

பயிற்சி -3
அடுத்து மூச்சை வெளியே விட்டவாறே உடலைக் குனியச் செய்து, கைகளைக் கால்களுக்கு முன்பாக தரையில் (உள்ளங்கை பதியுமாறு) வைக்கவும்.
கவனம் - மூட்டுக்களோ, கைகளோ சற்றும் வளையலாகாது.
முகம் லேசாக முழங்கால்களைத் தொட்டபடியும் இருக்கலாம்.

பயிற்சி-4
கைகளை அப்படியே (தரையில் வைத்த நிலையிலேயே) இருத்தி, வலது காலின் முழங்காலை மட்டும் முன்னால் மடக்கி, இடது காலை பின்னால் வளையாமல் நன்கு நீட்டவும். பிறகு காலை நகர்த்தாமல் மார்பை உயர்த்தி முதுகையும், கழுத்தையும் மூச்சை உள்ளுக்கிழுத்த வாறே சற்று பின்புறமாக வளைத்திட வேண்டும்.பார்வை நேராக இருக்கட்டும்.

பயிற்சி-5
வலது காலையும், இடதுக் காலையும் பின்னோக்கிக் சேர்த்து நீட்டி (குதிகால் மேலே உயர்ந்து) கைளை மட்டும் அப்படியே வைத்திருக்கவும். முகம் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது உடலின் மற்ற பாகங்கள் தரைக்கு மேலே தூக்கி நிற்க, உள்ளங் கையையும் ,பாதங்களின் விரல்களும் மட்டுமே தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு முக்கோண அமைப்பு வர வேண்டும்.
உடலின் பாரம் முழுவதும் கைகளின் மீது விழ வேண்டும்.
(
அதற்காக முக்க வேண்டாம்) எந்த ஒரு பாகமும் வளையலாகாது (முட்டிகள் உள்பட)
இந்த ஆசன நிலை முழுவதும் மூச்சை தம் கட்டி உள்ளேயே வைத்திருப்பது அவசியம்.

பயிற்சி-6
அடுத்தபடி முழங்கைகளையும், முழங்கால்களையும் சற்றே கீழிறக்கிய நிலையில் பிருஷ்டப் பகுதி மட்டும் தரையிலிருந்து மேலே தூக்கி நிற்கட்டும்.உள்ளங்கை முதலில் மற்ற பாகங்கள் தரையைத் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும். இந்த நிலையில் மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.

பயிற்சி-7
ஏழாவது நிலையாக மூச்சை நன்கு உள்ளிழுத்தவாறே தலையையும், மார்பையும் மேலே நிமிர்த்தவும். தலையை கூடிய வரை பின்னே வளைக்கவும். உடலின் கனத்தை உள்ளங்கைகளிலும், முழங்காலிலும் படும்படி அமைக்கவும்

பயிற்சி-8
அடுத்தபடி, கை கால்கள் முந்திய நிலையில் அப்படியே இருத்தி வைத்து, பிருஷ்ட பாகத்தை மட்டும் முடிந்த வரை மேலே உயர்த்திடுங்கள். அதை மேலே உயர்த்தும் போது, குதிகால்களை
நன்கு தரையில் அழுத்தி வைத்துக் கொள்க.முக வாய்க்கட்டையை மார்பை ஒட்டி வைத்துக் கொள்க. தலையை உட்புறமாகத் தொங்க விடுங்கள். முழங்கால்கள் (முட்டிகள்) சற்றும் வளையலாகாது. இந்த நிலையில் மூச்சை வெளி விடாமல் தம் கட்டி உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இரு நொடிகள் இந்நிலையில் (முக்கோணம் போல) நிற்கவும்

பயிற்சி-9
அடுத்ததாக, இடது காலை மட்டும் முன் வைத்து இரண்டு கைகளுக்கு நடுவில் தரையில் வைத்து விடுங்கள். வலதுக் காலை பின்னால் நன்கு (முட்டி மடியாமல்) நீட்ட வேண்டும்.
இந்தப் பயிற்சி 9 நிலையிலும் மூச்சை தம் பிடித்து உள்ளேயே மார்பு விம்ம (வெளியே விடாமல்) வைத்திருக்க வேண்டும்.

பயிற்சி-10
அடுத்து வலது காலை இடது காலோடு சேர்த்து ஒட்டியிருக்குமாறு வைத்து, பிருஷ்ட பாகத்தை மேலே தூக்கி உள்ளங்கைகள் தரையில் பதிய குனிந்து நிற்க வேண்டும். தலை உட்புறமாக குனிய வேண்டும். இந்த ஆசன நிலையும் 3-வது ஆசன நிலையும் ஒன்றேதான்.
இப்போது மூச்சை வெளியே விட்டு விட வேண்டும்.

பயிற்சி-11
படத்தில் காட்டியபடி, கைகளை மேலே உயர்த்திய நிலையில் நின்று கொண்டு, முடிந்த அளவுக்கு உடம்பை பின்னாலே வளைக்கவும். தலை நிமிர்ந்து நேராக மேலே பார்க்கட்டும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கலாம். பின்னர் நிமிர்ந்து வெளி விடலாம்.

பயிற்சி-12
கடைசியாக நின்ற நிலை அதாவது மூச்சை அமைதியாக உள்ளுக்குள் இழுத்தவாறே இரண்டு கைகளையும் கும்பிட்ட நிலையில் அழகுற நிற்கவும். பிறகு மூச்சை வெளியிட்டு ஓய்வு எடுக்கவும். இப்படி பன்னிரண்டு நிலைகளையும் வரிசை தவறாமல், தாறு மாறாக குனிந்து வளைந்து இடையில் ஓய்வெடுத்தல் என்று முறையில்லாமல் செய்யக் கூடாது.
ஒழுங்காக செய்தால்தான் சூரிய நமஸ்காரத்தின் முழுப் பயனும் கிட்டும்.

இதற்குள் ரத்த ஓட்டச் சுற்று இரண்டு மூன்று சீரான நேர்ச் சுற்றுகள் சுற்றியிருக்கும்.

இதில் 12 நிலைகளுக்கும் மூச்சை உள்ளிழுக்கும் முறைகள் முக்கியம். கவனித்து செய்யுங்கள்.

பலன்கள்:-
உடலின் எல்லாப் பாகங்களும், உள்ளூறுப்புக்களுமே நல்ல பயன்களை எய்துகின்றன. இதன் சிறப்பு இப்போது விளங்குகின்றதா?
மேலும் நரம்பு மண்டலம் அனைத்தும் நல்ல பயிற்சி பெற்று சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன.

நாடிகளெல்லாம் பலமடைகின்றன.

அனைத்துச் தசைகளும் உருண்டு, திரண்டு வளர்ந்து உடனே கட்டழகுடன் திண்ணென்று பார்க்கப் படு கவர்ச்சிகரமாக அமைந்து விடுகிறது.

நுரையீரலும், இதயமும் நல்ல சுவாச முறைகளைப் பெற்றதனால் வலிவடைந்து கோளாறுகளின்றி ஒழுங்காகச் செயலாற்று கின்றன. ஒருவித நோயும் மனிதனை அண்டவே அண்டாது

Wednesday, January 11, 2012

சுவாமி விவேகானந்தர்


சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது

பிறப்பும் இளமையும்
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

இராமகிருஷ்ணருடன்
இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

மேலைநாடுகளில்
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்
1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

மறைவு
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் கருத்துக்கள்
மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

Monday, January 9, 2012

வாழ்வதற்கு வேண்டிய தகுதி - விவேகானந்தர்

* வாழ்க்கையில் எப்போதும் தூய்மை உடையவன் கடவுளுக்கு மிக நெருங்கியவனாகிறான்.

* ஏமாற்றுவதால் எதையும் செய்து விட முடியாது. அன்பாலும், ஆர்வத்தாலும், ஆன்மிக சக்தியாலுமே பெரிய செயல்களை நிறைவேற்ற முடியும்.

* பிறருக்காக செய்யும் சிறிய முயற்சி உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது, பிறருக்காக நன்மையை எண்ணுவதால் சிங்கத்தின் பலம் இதயத்திற்கு கிடைக்கிறது.

* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அத்தகையவனே உலகில் வாழத் தகுதியுள்ளவன்.

* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள். பணம் சக்தியல்ல, நன்மையும் தெய்வ பக்தியுமே சக்தி.

* தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை உண்டு பண்ணுவதே உண்மைக் கல்வி.

* அனைத்தையும் செவிசாய்த்துக் கேளுங்கள். உங்களுக்கு எது நல்லதென்று படுகிறதோ, அதை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

* உயிரும், மனமும் இணைந்து செயல்பட்டால், எந்தச் செயலையும் செய்து வெற்றி பெறலாம்.

* நல்ல நூல்களைப் படிப்பது, சொற்பொழிவுகளை நடத்துவது இவற்றைவிட அன்பால் மட்டுமே ஆன்மிகத்தில் மேம்படமுடியும்.

* தேவையற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு மனப்பூர்வமாக இறைவனை வழிபட்டால், அவன் இருப்பதை உணரலாம்.

* பக்தனாக விரும்புகிறவன், சொர்க்கத்தை அடைவது போன்ற ஆசைகளை துவக்கத்திலேயே விட்டுவிட வேண்டும்.

* வெறுப்பையும், கோப உணர்ச்சியையும் அடக்கும் போது, அந்த அளவிற்கு நல்ல ஆற்றலை சேமிக்கிறோம். அந்த ஆற்றல் உயர்ந்த ஆன்மிக சக்தியாக மாறுகிறது.

* ஆன்மிக அறிவால் மட்டுமே நமது துன்பங்களை என்றென்றைக்கும் ஒழிக்க முடியும். மற்ற அனைத்து அறிவும் அதை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நீக்கும்.

* உன்னைப்பற்றி அளவுக்கு மீறி பெருமை கொள்ளாதே. பிறர் பெறாத அந்த புகழை உனக்கு அளித்தது இறைவனின் அருளே. அதை ஒரு வழிபாடாக செய்.